Home இலங்கைஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றம்

ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்று நிறுவப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இந்த விசேட நீதிமன்றம் நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவது குறித்து அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கௌரமாக விலகியுள்ளதாகவும், அவர் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More