இலங்கை பிரதான செய்திகள்

விண்ணில் ஏவப்பட்ட செய்மதியை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது- ரோஹித்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விண்ணில் ஏவப்பட்ட செய்மதி ஒன்றை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் கூறுவதனைப் போன்று பூதக் கண்ணாடியைக் கொண்டு இந்த செய்மதியைப் பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்மதித் திட்டம் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ரோஹித்தவிடம் நேற்றைய  தினம் ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த செய்மதித் திட்டத்திற்கு எவ்வாறு பணம் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக ரோஹித்த கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு பணத்தையும் செலவிடவில்லை என ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap