காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான பணிகளுக்காக மணல் குவாரிகள் மூலம் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதனால் பாலங்கள் செயல் இழந்து போகின்றன எனவும் விதிகளை மீறி காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதால், நீரோட்டம் என்பது இல்லாமல் போகிறது எனவும் முசிறியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் மணல் அதிகமாக அள்ளுவதால் தண்ணீரின் வரத்தும் குறைந்து தங்கள் பகுதியில் குடிநீருக்கே பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது எனவும் எனவே தங்கள் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை நேற்றையதினம் வந்த நிலையில் கரூர் மாயனூரில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றில் உள்ள குவாரிகளில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.