இலங்கை

கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது


கொழும்பு மாவட்ட நகர திண்மக்கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு’ என்ற   இன்று   ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  ; தலைமையில் இடம்பெற்றது.

இந்த  பாரிய கழிவு முகாமைத்துவ திட்டத்தை அமைக்கும் எண்ணக்கருவை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினதும் ஒத்துழைப்புடன் பெயார்வே வேஸ்ட் மெனேஜ்மண்ட் தனியார் நிறுவனத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கரதியான கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் நாள்தோறும் சேகரிக்கப்படும் பெருமளவான கழிவுகளில் இருந்து   இத்திட்டத்தின் மூலம்   சுமார் 500 மெற்றிக் தொன் அளவை மின்சாரமாக மாற்றக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினால் சுமார் 37,500 வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும் என்பதுடன், மின்சாரத்திற்கு மேலதிகமாக இதன் மூலம் கூட்டு உரமும் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சூழலுக்கு வெளியேற்றப்படும் குப்பையில் 90 சதவீதம் குறைவடைவதுடன், குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply