குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் மீளப் பெறும்படி வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளமைக்கு அமெரிக்க ஜனரிதிபதி டொனால்ட் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுக்கு அருகே அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்க போவதாக அறிவித்த வடகொரியா அதற்காக 4 ஏவுகணைகளை தயாராக வைத்திருந்தது.
இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்ற ஒரு நிலை காணப்பட்ட நிலையில் குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த ஏவுகணைகளையும் மீளப் பெறும்படி வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பிலேயே டொனால்ட் டிரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்ததுடன் வடகொரியா ஜனாதிபதி புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நியாயமான முடிவு எனவும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் தெரிவித்த ரட்ப் இதன் மூலம் பேரழிவும், ஏற்று கொள்ள முடியாத செயலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.