இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பிலான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்  கொலை   வழக்கு தொடர்பிலான  மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை   வழக்கு தொடர்பில்  ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும்  பேரறிவாளன் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பில்  மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை எனவும்  இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்பு குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாக செயல்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்    ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இது தொடர்பான மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன்    வழக்கு  விசாரணையை எதிர்வரும் 23ம்திகதிக்கு ஒத்திவைத்தது

Add Comment

Click here to post a comment

Leave a Reply