ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்வதற்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் எதிர்வரும் 28ம் திகதி முதல் செப்ரம்பர் 10ம் திகதி வரை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கலந்து கொள்ள 5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்;ட் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
30 வயதான ஷரபோவா ஊக்க மருந்து பிரச்சினையால் அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தமை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்குப் பின்னர் எந்தவிதமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.