Home உலகம்பார்சிலோனாவில் தீவிரவாதிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் – இரண்டாவது தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவிப்பு

பார்சிலோனாவில் தீவிரவாதிகள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் – இரண்டாவது தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஐவர்   கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவர்கள் மீது   துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும்   சில மணித்தியாலங்கள் இடம்பெற்ற    இந்த துப்பாக்கிச் சண்டையில்  5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன்  ஒரு தீவிரவாதி காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சண்டையின் போது காவல்துறையினர் ஒருவரும் 9 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்சிலோனாவின்  சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில்; நேற்றையதினம் வானொன்று பொதுமக்கள் மீது மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்   13 உயிரிழந்துள்ளதாகவும் 100  பேர் வரையில்  காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில்    காம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும்  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More