பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை புறக்கணிக்க உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் – பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் தன்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தே அதனை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் கலைக்கபட்டுள்ள காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை தாங்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் அதன் நினைவுக் கல்வெட்டு கழற்றி எறியப்பட்டு மீண்டும் புதிய நினைவுக் கல்வெட்டு நடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்