Home உலகம் கூகுள் நிறுவனம் சூரிய கிரகணம் தொடர்பில் காணொளி தயாரிக்க உள்ளது

கூகுள் நிறுவனம் சூரிய கிரகணம் தொடர்பில் காணொளி தயாரிக்க உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூகுள் நிறுவனம் சூரிய கிரகணம் தொடர்பில் ஓர் காணொளியை தயாரிக்க உள்ளது. கூகுள் மற்றும் பெர்கிலி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த காணொளியை தயாரிக்க உள்ளன.

நாளைய தினம் சூரிய கிரகணம் ஏற்படும் உலகின் பல பாகங்களிலும் அவை படம் பிடிக்கப்பட்டு, அந்த படங்களைக் கொண்டு இந்த காணொளி தயாரிக்கப்பட உள்ளது. இந்தக் காணொளிக்கு மெகாமூவி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியை தயாரிப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் ஏற்படும் போதான காட்சிகளை இணையம் வழியாக அனுப்பி வைக்குமாறு கூகுள் நிறுவனம் கோரியுள்ளது.

இந்த முயற்சி கற்ற நடவடிக்கைகளுக்கும் ஆய்வு நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமையும் என நம்பப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More