இலங்கை

கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக செப்டம்பர் மாதம் 2ம் திகதி கூட்டம் நடத்தப்படவிருந்த போதிலும், உயர்தரப் பரீட்சை இறுதி நாள் என்பதனால் பொதுக் கூட்டம் 3ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொரளை கம்பல் மைதானத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply