குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சியில் இரணைமடுகுள அபிவிருத்தியின் இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை திறப்பு விழாவுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சரான முதலமைச்சருக்கு அழைக்கப்படாமல் புறக்கணிப்பட்டமைக்கு விவசாயிகள் பலா் கவலை தெரிவித்துள்ளனா்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இரணைமடு அபிவருத்தியின் ஒரு பகுதியான இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இராநாதபுரம், பன்னங்கண்டி நெற்களஞ்சியசாலைகள் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பின்னர் சி. சிறிதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு நெற் களஞ்சியசாலைகளை திறந்து வைத்தாh். சிறப்பு விருந்தினராக மாவட்ட அரச அதிபா் அழைக்கப்பட்டிருந்த போதும் அவா் கலந்துகொள்ளவில்லை
கடந்த காலத்தில் இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர், முதலமைச்சர் ஆகியோh் அழைக்கப்பட்டு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து வடக்கு மாகாண சபை சார்ந்து அமைச்சர்கள் உறுப்பினர்கள் அழைக்கப்படாது நிகழ்வுகள் இடம்பெறுகின்ற.
அந்த வகையில் மேற்படி விவசாயிகளுக்கான இந்த நிகழ்விலும் கிளிநொச்சியில் பிரயோகிப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக வட மாகாண விவசாய அமைச்சரான முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். முதலமைச்சரை அழைத்தால் தான் நிகழ்வில் பங்குபற்றமாட்டேன் என கிளி நொச்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவா் கண்டிப்பாக தெரிவித்தமையினால் முதலமைச்சருக்கு அழைப்பு விடப்படவில்லை என விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனா்.
இவா்களின் இவ்வாறான அரசியல் போட்டிகளால் தங்களின் எதிர்கால விவசாய நடவடிக்கைகளே பாதிப்படப் போகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
மேலும் அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டுறவாளா் தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன் முதன்மை விருந்தினராகவும், வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் சிறப்ப விருந்தினராகவும் ஏற்பாட்டாளர்களால் அழைக்கப்பட்டிருந்தனா். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது பதவி நிலை ஒழுங்கின் படி அமைச்சரை முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த நிகழ்வில் அனந்தி கலந்துகொள்ளமாட்டார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது
இருந்தும் பின்னா் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது