171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் ரபால் நடால் உலக டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் இடத்தை வகித்து வந்த பிரித்தானியாவின் அன்டி மரேவை பின்தள்ளி, நடால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் முதல் தடவையாக நடால் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். நடால் ஏற்கனவே 141 வாரங்கள் முதலாம் இடத்தை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகளினால் நடால் இலகுவில் தரவரிசையில் இலகுவில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love