Home உலகம்சீனாவில் ஏற்பட்ட கடும் காற்றினால் 12 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட கடும் காற்றினால் 12 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் 12 பேர் வரையில்  கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சீரற்ற காலநிலை காரணமாக  நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஹாடோ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காற்று காரணமாக சீனாவின் குனாங்டொங் மாகாணத்தின் சூசாய் நகரே   அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் மற்றம் கடும் காற்றினால் நகரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து சுமார் 27ஆயிரம்  பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தினால் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More