Home உலகம்பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த வாரம் சீருடை அணியாத காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் போதைப் பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வட மெனிலாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையில் உயர் பதவி வகிக்க வேண்டுமென கனவு கண்ட பாடசாலை மாணவரே, காவல்துறையினரால் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவரின் சடலம் பன்றி பண்ணை ஒன்றுக்கு அருகாமையில் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More