155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்பு கூட்டுறவு குறித்து இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மொஸ்கோவில் தற்பொழுது நடைபெற்று வரும் சர்வதேச இராணுவ மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிக்கு சமாந்திரமாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்யாவிற்கு பயணம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன தலைமை தாங்குகின்றார். பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love