154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எட்டாவது தடவையாக இம்முறை கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகின்றது.
வன்முறை கடும்போக்குவாதத்திற்கு எதிரான உலக நடவடிக்கைகள் என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடத்தப்பட உள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த 800 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
Spread the love