Home இந்தியாமேற்குவங்க மாநிலத்தில் பசு மாடுகளை கடத்த முயன்றதாகக் கூறி 2 பேர் அடித்துக் கொலை:-

மேற்குவங்க மாநிலத்தில் பசு மாடுகளை கடத்த முயன்றதாகக் கூறி 2 பேர் அடித்துக் கொலை:-

by admin

மேற்குவங்க மாநிலத்தில் பசு மாடுகளை கடத்த முயன்றதாகக் கூறி 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கிராமம் ஒன்றின் ஊடாக பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனம் ஒன்று சென்று டிகாண்டிருந்த வேளை பசுக்களை கடத்துவதாகக் தெரிவித்து வாகனத்தினை வழிமறித்த ஒரு கும்பல் அதிலிருந்த இருவரை சரமாரியாக அடித்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர்கள் வழியிலேயே இநற்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அப்பகுதியில் வன்முறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More