151
எல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம பிரதேசத்தில் உள்ள உப தபால் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அத்தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது தீ விபத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த 49 வயதான பெண் அதிபரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத தெரிவித்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love