உத்தரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. குறித்த மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒக்சிசன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மேலும் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
எனினும் மூளையழற்சி, ஒவ்வாமை, நிம்மோனியா காய்ச்சல், சீழ்பிடிப்பு போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை வளாகங்கள் தண்ணீரால் மூழ்கியதாலும், அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் மரணமடைந்துள்ளது அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது