குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளா் தெரிவித்துள்ளாh்
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்ட்ட பணிகள் 21 மாதங்களில் நிறைவுபெறவுள்ளது. மீள்குடியேற்றத்தின் பின்னா் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்ட போது பூநகரி முழங்காவில் ஊடாக மன்னார் பிரதான வீதியில் காணப்படுகின்ற மண்டக்கல்லாறு பாலம் அமைந்துள்ள பகுதியில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாது வந்தது.
இந்தநிலையில் புதிதாக நவீன முறையில் பாலம் அமைக்கும் பணிக்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டு 2016 நவம்பரில் பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
95 மீற்றர் நீளமும், 7.4 அகலமும், கொண்ட மண்டக்கல்லாறு பாலத்தில் 1.5 நடைபாதையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இந்த பாலத்தில் பூநகரி சங்குபிட்டி பாலம் போன்று நடுப்பகுதி உயர்வாக கொண்ட பாலமாக அமைக்கப்படவுள்ளது எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளா் தெரிவித்தார்.