குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டராம்பின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவரது கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு பாகிஸ்தான் பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை பாகிஸ்தானே முன்னெடுப்பதாக டொனால்ட் டராம்ப் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள் அமெரிக்கா பயணம் செய்வதனையும், அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் பயணம் ; செய்வதனையும் ஒத்தி வைக்குமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கவாஜா ஆசிப் ஆசிப் (Khwaja Asif Asif ) கோரியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியதனைத் தொடர்ந்து இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.