விளையாட்டு

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரருக்கு ஐந்தாண்டு போட்டித் தடை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சார்ஜில் கானுக்கு ஐந்தாண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சார்ஜில் கானுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டு இதில் இரண்டரை ஆண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இருபதுக்கு 20 லீக் போட்டித் தொடரில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அந்நாட்டு கிரிக்கட் வாரியம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 28 வயதான சார்ஜில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் 25 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 15 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளில் சார்ஜில் கானினால் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply