Home உலகம்ஐநா அதிகாரியை நாடு கடத்தும் உத்தரவிற்கு குவந்தமாலா நீதின்றம் எதிர்ப்பு

ஐநா அதிகாரியை நாடு கடத்தும் உத்தரவிற்கு குவந்தமாலா நீதின்றம் எதிர்ப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியை நாடு கடத்தும் உத்தரவிற்கு குவந்தமாலா நீதிமன்றம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊழல் மோசடிகளுக்கு எதிரான அதிகாரியே இவ்வாறு நாடு கடத்தப்பட வேண்டுமென குவந்தமாலாவின் ஜனாதிபதி ஜிம்மி மொராலெஸ் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த உத்தரவினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி வேலாஸ்குஸ் ( Velásquez   )உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் நாடு கடத்தும் உத்தரவு சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியை நாடு கடத்த முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More