Home இலங்கை ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று!

ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று!

by admin

சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில்  உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார்.

இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து திருவனந்தபுர மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றினார். அங்கே இருந்தபடி    The Carthaginian Clergy என்கிற தலைப்பில் இறையியலில்  முனைவர் பட்டம் பெற்றார். வடக்கன்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அவர் குருசாமி என்பவரிடம் தமிழ் பயின்றார்.

அவருக்கு லத்தீன், ஸ்பானிஷ், பிரெஞ்சு,ஜெர்மன், போர்த்துகீஸ் முதலிய பல்வேறு மொழிகளில் தனித்த புலமை இருந்தது. ஆனாலும்,தன்னுடைய அன்னைத்தமிழின் இலக்கியங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற எண்ணம் அவரை செலுத்தியது. அண்ணாமலைப்பல்கலையில் அவர் முதுகலை படிப்பில் இளங்கலையை பயிலாமலே  இணைய  அண்ணாமலை செட்டியார் அனுமதி கொடுத்தார்.   முப்பத்தி இரண்டு வயதில் தமிழ் மொழியை முறையாக அவர் பயின்று இன்பமுற்றார். எம்.லிட் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில் இயற்கை என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். ரிக் வேதப்பாடல்களை படித்துவிட்டு ,”இந்தப்பாடல்களை விட சங்க இலக்கிய பாடல்கள் பல மடங்கு அற்புதமானவை !” என்று மெய்சிலிர்த்து சொன்னார்.

1948 ஆம் ஆண்டு  தமிழ் இலக்கியக் கழகத்தை  தூத்துக்குடியில் நிறுவி பல்வேறு தமிழ் நூல்களை பதிப்பித்தார். அங்கே “Tamil Culture” என்ற ஆங்கிலக் காலாண்டிதழை வெளியிட்டார். தமிழின் பெருமையை உலகறிய செய்ய எண்ணிய அவர் பிற மொழிகளில் தமிழ் பற்றி வந்திருக்கும் குறிப்புகளை  ‘Reference Guide to Tamil Studies” என்ற நூறுக்கு சற்றே கூடுதலான குறிப்புதவி நூலில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பத்தி ஐந்து பிற மொழி நூல்களில் வழங்கி வரும் குறிப்புகளை பதிவு செய்தார்.  ஒன்பது வருடங்கள் இலங்கையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் லண்டன் பல்கலையில் தமிழ் இலக்கியம் வழியாக கல்வியியல் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து இரண்டாம் முறையாக முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் மலேசியாவில் உள்ள பல்கலையில் இந்தியத்துறையில் தலைவராக இணைந்து தமிழ் பேராசிரியாக பணியாற்றினார். அப்பொழுது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழறிஞர்களை இணைத்து உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழக அரசின் உதவியைக் கோரினார். அப்பொழுதைய பக்தவச்சலம் அரசு பெரிய ஈடுபாடு காட்டாமையால்  உலகத்தமிழ் ஆராய்ச்சி கழகத்தை  (International Association for Tamil Research, IATR)  பல்வேறு தமிழறிஞர்களோடு இணைந்து நிறுவினார்.  முதல் உலகத்தமிழ் மாநாட்டை கோலாலம்பூரில் மலேசிய அரசின் உதவியோடு வெற்றிகரமாக அடிகள் நடத்தினார். அந்த அமைப்பே எட்டு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தியது. அதிலும் நான்கு உலகத்தமிழ் மாநாடுகள் அடிகளார்வாழ்நாள் காலத்திலேயே நடந்தது.

“இலத்தீன் சட்டத்தின் மொழியென்றால்,பிரெஞ்சை ராஜதந்திரத்தின் மொழி என்போம் என்றால்,ஜெர்மன் அறிவியலின் மொழி மற்றும் ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றால் தமிழ் பக்தியின் மொழி !” என்று முழங்கிய அடிகளார் தமிழின் பண்டைய இலக்கியங்கள் எப்படி வடமொழி இலக்கியங்களை போல அல்லாமல் சமயச்சார்பற்று விளங்கின என்பதை நிறுவினார். தமிழ்மொழியையும் அதன் இலக்கியச் செறிவையும்  ஜப்பான்,சிலி,பிரேசில்,அமெரிக்கா முதலிய நாடுகளில் இருநூறு சொற்பொழிவுகள் மற்றும் பாடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்.  தாய்லாந்தில் தங்கியிருந்த பொழுது அங்கே மன்னரின் முடிசூட்டு விழாவின் பொழுது பாடப்படுவது திருவெம்பாவை பாடல் என்பதை கண்டறிந்து உலகுக்கு சொன்னார்.

ஆசிய மொழிகளிலேயே முதலில் அச்சடிக்கப்பட்ட நூல் வெளியான மொழி தமிழ் என்பதை கார்த்திலியா  (1556),தம்பிரான் வணக்கம் (1578), கிறிஸ்தியானி வணக்கம் (1579) முதலிய அரிய அச்சு நூல்களின் மூலப்பிரதிகளை தேடிக்கண்டெடுத்து பதிப்பித்து நிரூபித்தார். தமிழின் ஆய்வுமுறையில் வரலாறு, பண்பாடு, ஒப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றை இணைத்து ஆய்வு செய்யும் போக்கை ஏற்படுத்தியதில் அவர் முன்னோடியாக இருந்தார்.

தன்னுடைய இறுதிக்காலத்தில்  ஈழத்தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அதில்  “தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச் சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள்கைகளையும் அவர்கள் கடைபிடித்தே வந்தனர், இன்றும் கடைபிடித்தே வருகின்றனர்”. என்று பெருமை பொங்க சொன்னார். ‘உலகெங்கும் உலாவும் தமிழ் மொழியின் தூதர்’ என்று அறியப்பட்ட தனிநாயகம் அடிகளை நினைவில் நிறுத்துவோம்.

அரசின் தடுப்புக் காவல் பட்டியலில் தனிநாயகம் அடிகளார் இருக்கும் தகவலை லக்ஸ்மன் கதிர்காமர் ஊடாக அப்போதய கடற்படைத்தளபதி தெரியப்படுத்தினார் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஆ.தேவராஜன் வழங்கிய செவ்வி

மறைந்த  பெரியார் ஆ தேவராஜன் நியூசீலந்தில் வசித்து வந்தவர். தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளாருடன் நீண்டகாலம்நெருங்கிப் பழகியவர். தொல்லியலில் ஆர்வம் கொண்டு அதில்பல கட்டுரைகளையும் எழுதியதுடன் அதில் ஆர்வமுள்ளஆய்வாளர்களுக்கு இன்று தமது வயோதிக நிலையிலும் ஆலோசனையையும் வழங்கி வந்தவர். தனிநாயகம் அடிகளார்பற்றி நூலும் வெளியிட்டுள்ளார். இலங்கையில் அவர்நினைவாக நினைவுச் சொற்பொழிவை தொடராக நடத்தி வந்தார். அந்த வகையில் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை நினைவுறுத்தும் வகையில்   வெளிவராத உண்மைகள் பலவற்றை    14 ஓகஸ்ட் 2013ல் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக  வெளிக்கொண்டு வந்தார் பெரியார் ஆ. தேவராஜன்.

அந்த வகையில் அவருடன் நெருங்கிப் பழகிய பெரியார்  தேவராஜனை அணுகி குளோபல் தமிழ் செய்திகளுக்கான பிரத்தியேகமான செவ்வி ஒன்றை நியூசீலந்தில் வாழும் எனது நண்பரும் ஊடகவியலாளருமான எஸ் எம் வரதராஜன் எழுத்துருவாகக் கொண்டு வந்தார்.  ஈழப் பேராசிரியர்  தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின்  பிறந்த தினம் இன்று. அந்த வகையில் அந்த செவ்வியினை மீள்பிரசுரம் செய்கிறோம் – 

பூரணி குருபரன் (பிரதம ஆசிரியர்)

வரதனின் கேள்வியும்   ஆ தேவராஜனின் பதிலும்

கேள்வி: தனிநாயகம்  அடிகளாரின் நூற்றாண்டு விழாவை இந்தஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தங்களுக்கும் அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.  முதன்முதலில் அடிகளார் அறிமுகமானது எப்படி  ?

பதில் 1951 ஆம் ஆண்டு நான் மாணவனாக இருந்தபோது Times of Ceylon பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் ஒரு நாள் அடிகளாரின்படத்துடன் ஒரு செய்தி வந்திருந்தது அதில் அடிகளார் தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் சிறப்பு பற்றியும் சொல்லியிருந்தார்.

மிகத் தொன்மையான தொல்காப்பியம் இன்றும் படித்து விளங்கக்கூடியதாக இருக்கிறது .தமிழ் மொழி தொன்மையானது மட்டுமன்றிஇளமையானது என்றும் விளக்கியிருந்தார். அதுதான் அவர் பற்றியமுதல் அறிமுகம்.

கேள்வி: அதன் பின் ?

அதன்பின் 1952 ஆம் ஆண்டு ஊடகங்களில் விளம்பரம்  ஒன்றுவந்திருந்தது .அதில் அடிகளார் தூத்துக்குடி இலக்கிய மன்றத்தின்ஆதரவில் வெளியிட்ட Tamil Culture   என்ற காலாண்டிகை பற்றியவிமர்சனம் அது. அதில் இருந்த முகவரியை எடுத்து அடிகளாருக்குஇலங்கை ரூபா ஐந்தை அனுப்பினேன். அப்போது அந்தக்காலாண்டிகைக்கு ஆண்டுச் சந்தா ரூபா ஐந்து மாத்திரமே. .எனக்கும்முதல் இதழ் கிடைத்தது .

கேள்வி: முதல் இதழ் பற்றிய உங்கள் நினைவலைகளைப் பகிர்வீர்களா?

பதில்: ஆம்..அதில்  பல்வகைக் கட்டுரைகள் இருந்தன. ஆயினும்எனக்கு மிகவும் பிடித்தது அடிகளாரின் ஆசிரியத் தலையங்கம்ஆகும்.அதிலே அவர் பார்வை விரிந்து பரந்து தெளிவாக இருந்தது. அவர் மூன்று விடயங்களை அழுத்திக் கூறியிருந்தார். தமிழ்பண்பாடும் நாகரிகமும் பழமையும் செழுமையும் கொண்டனவாகஇருந்தும் அவற்றின் கூறுகள் உலகப் பண்பாடு, நாகரிகத்தில் சேர்ந்துஉலகப் பண்பாடு, நாகரிகத்தை செழுமைப்படுத்தவில்லை. அந்தஇலக்கை அடைய நாம் உலகத் தொடர்பு மொழி ஆகிவிட்டஆங்கிலத்தை துணைகொண்டு  செயற்படவேண்டும் .பெரும்வல்லரசான ரோமாபுரியும் சாய்ந்ததுதான் என்பதைநினைவிற்கொண்டு எழுநிலைமாடம் கால்சாய்ந்துக்குக்கழுதைமேய்  பாழாகினும் ஆகும் என்ற அவ்வையின் கூற்றுக்குஇணையான கிரேக்க கூற்றைப்போட்டு முடித்திருந்தார்,.

கேள்வி: இதனால் உங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டதுஎன்கிறீர்கள் ?

நான் அப்போதும் மாணவனாக இருந்தேன்.  இது என்னிடம் ஒருஉந்துதலை ஏற்படுத்தியது. நான் யாழ் மாணவர் ஒன்றியம் என்றபெயரில் யாழ்ப்பாண  கல்லூரிகளில் உள்ள மாணவர் சங்கங்களைஇணைத்து “தமிழ் ஓசை ” என்ற பெயரில் ஒரு காலாண்கைடு சஞ்யைசிகையை  நடத்தினேன். 7 இதழ்கள் வெளியாகின. அவை யாவும் இன்றும்இலங்கை ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன.

அந்த இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டேன். ஒவ்வொரு இதழிலும் ஒரு நல்லறிஞர் கட்டுரையும் இடம்பெறும். பேரா .மு. வரதராசனார், அ.ச.ஞானசம்பந்தன் , கி.வா. ஜகநாதன், தனிநாயக அடிகள் போன்றோர் எழுதினர்.தனிநாயக அடிகள் “மலரும்மாலையும்” என்ற தலைப்பில் சாங்க கால மக்கள் வாழ்வில் மலரும்மாலையும் பெற்ற இடத்தை விளக்கியது. கவிஞர் முருகையன் , பேரா. சு. சுசீந்திரராஜன் போன்றோர் எழுதினர். சில பெண்களும்எழுதினர்.

கேள்வி: அடிகளார் உறவு எப்படி நேரடியாகத்  தொடந்தது?

பதில்: நான் அதன்பின் அரச சேவையில் சேர்ந்து.. அதற்காக  . நான்கொழும்பு சென்று பொரளையில் தங்கியிருந்தேன். அடிகளாரும்அப்போது பொரளை ஆல் சைன்டிஸ் சர்ச் (சகல புனிதர்கள் தேவாலயம்) வளாகத்தில் தங்கி இருந்தார். அடிக்கடி சென்றுசந்திப்பேன். நான் தொடர்ந்தும் தமிழ் கல்ச்சர்  இதழுக்கு  சந்தாதாரரைசேர்த்துக் கொடுத்தேன்.

1955 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாசம் கொழும்புன் நகர மண்டபத்தில் ஓய்வு பெற்ற மூத்த உயர்நீதிமன்ற நீதியரசர் செ. நாகலிங்கம் தலைமையில் “தமிழ் கல்ச்சர் – இட்ஸ் பாஸ்ட், ப்ரெசென்ட், அண்ட் வியூச்சர் வித் டிபிறேன்ஸ் டு சிலோன் “என்றதலைப்பில் அற்புதமான ஒரு உரை ஆற்றினார். தந்தை செல்வாஉட்பட தமிழ் சமூக அறிவியலாளர் திரள்நிலையைக் காண முடிந்தது. அப்போது அவர் பல்கலைக் கழக கல்வியியல்துறை மூத்த விரிவுரையாளராக பணிபுரிந்ததால் கல்வியில் பட்டயப் படிப்பு கற்றசிங்கள ஆசிரியர்களும் பிற சிங்கள அறிஞர்களும் கூடி மண்டபம்நிரம்பி வழிந்தது. அச்சிடப்பட்ட அந்த உரை அன்றே 50 சதத்துக்குவிற்பனை செய்து முடிக்கப்பட்டது  .  பின்பு மீள்பதிப்புகளும் வந்தன. சிங்கள மொழியாக்கமும் வெளியிடப்பட்டது

கேள்வி: தங்களால் அவர் வாழ்வில் மறக்க முடியாத சிலநிகழ்சிகளைக் குறிப்பிட முடியுமா?

பதில்: 1956 ஜூன் 5 ஆம் திகதி காலை தனிச் சிங்கள சட்ட முன்வடிவுநாடாளுமன்றில் கொண்டுவரப்பட இருந்ததை எதிர்த்து தந்தைசெல்வா தலைமையில் காலிமுகத்திடலில் ஒரு சத்தியாக்கிரகஎதிர்ப்பு நடத்தப்பட்டது.அதில் அடிகளாரும் கலந்துகொண்டார். அங்குகாடையர் கூட்டம் தமது கை வரிசையைக் காட்டத் தவறவில்லை.சிலர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டனர். ஒருசில காடையர்கள்அடிகளாரைத் தாக்க எத்தனித்தபோது அங்கு கடமையில் நின்றிருந்தபிரதி காவல்துறை  மா அதிபர் சிட்னி சொய்சா தலையிட்டுத் தடுத்தார். அவர் அண்ணன் ஸ்டான்லி சொய்சா அன்று நிதி அமைச்சராகஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கேள்வி: தமிழ் மக்களின் சமகால சூழ நிலைகளுடன்தொடர்பான  முக்கியமானது ஏதாவது?

Rear Admiral (late) Rajan Kadirgamar & lakshman kadirgamar

பதில்: ஆம்! அவர் வாழ்வில் திருப்புமுனை ஆனது அந்தஈடுபாடுதான். 1961 ஆம் ஆண்டுமுதல் வடகிழக்கு உட்படஇலங்கை முழுவதும் தனிச் சிங்களச் சட்டத்தைநடைமுறைப்படுத்த அரசு தயாரானது. வடகிழக்கில் அதை தடுத்துநிறுத்தும் நோக்கில் வடகிழக்கு அரச அலுவலகங்களை முடக்கிசத்தியாக்கிரகஇயக்கம் ஒன்றை தந்தை செல்வா நடத்தினார். அப்போது தனிநாயகம் அடிகள் கொழும்பு உட்பட்ட முக்கியநகரங்களில் சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்திவிழிப்புணர்வை ஏற்படுத்தி உண்டியல் குலுக்கி பணம் சேர்த்துசத்தியாக்கிரகிகள் தேவைக்கு உதவினார். 1961 பெப்ரவரி 17இல்தொடங்கிய சத்தியாக்கிரகம் ஏப்ரல் 17 இல் இராணுவ வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது. அப்போது சத்தியாக்கிரகத்துக்கு உதவியமுக்கியஸ்தர்கள் அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்க அரசுஅவசரகால நிலையை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டது. அந்தப்பட்டியலில் தனிநாயகம் அடிகளின் பெயரும் இருந்தது. அதைக்கண்ணுற்ற  அப்போது முக்கிய பதவியில் இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் தனது சகோதரனும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சருமான லக்ஸ்மன் கதிர்காமரூடாக அடிகளாருக்கு உடனே செய்திஅனுப்பி நாட்டைவிட்டுப் போய்விடச் சொல்லி இருந்தார். அதேமாலை நான் அடிகளாரை சந்திக்கச் சென்றேன்  . அவர் அந்தச்செய்தியை எனக்குச் சொல்லி, மறுநாள் காலை தான் சென்னை செல்வதாகவும் உறுதிபடுத்தினார். அத்தோடு இறுதிச் சத்தியாக்   கிரகத்தின்போது   இராணுவம் நடத்திய கெடுபிடித் தாக்குதல்கள்பற்றிய செய்தி அறிக்கை,  குறித்த ஒருவருக்கு மறுநாள் காலைவரும் என்றும் அதை அவரிடம் பெற்று Air Ceylon விமானதலைமையகத்தில் குறித்த ஒருவரிடம் கொடுக்கும்படியும்சொன்னார். அவர் தனக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பார்என்றும் சொன்னார். அதன்படி செய்தேன். அதன்பின் அடிகளார்இலங்கைக்கு திரும்பமுடியாத் நிலை. அது அவருக்கு புதியவிரிவான பாதையை திறந்துவிட்டது.

கேள்வி: அதென்ன புதிய விரிவான பாதை?

பதில்: சென்னையிலிருந்தகாலை மலேசியாவில் அமைச்சர்களாகஇருந்த கொக்குவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகம்,சம்பந்தன்ஆகியோர் தொடர்பு ஏற்பட்டு மலேசியப் பல்கலைக்கழகத்தில்இந்தியவியல் கற்கை நெறித் துறையை தொடக்கினார். அங்குசென்று பொறுப்பேற்றுக்கொண்டார் .அப்போது மலேசியப் பிரதமராகஇருந்த டாத்தோ துங்கு அப்துல் ரஹ்மான் தாராள உதவி புரிந்தார் . இந்தியவியல் துறையூடாக தமிழ்த்துறையையும் மேம்படுத்தினார். `1963இல் தில்லியில் கீழைத்தேசவியல் மாநாடு நடந்தது.

அங்கு சமஸ்கிருதம் சார்ந்த ஆய்வுகளே முக்கியத்துவம் பெற்றன. அதில் பங்கு கொண்ட திராவிட / தமிழ் ஆய்வுகளில்ஈடுபாடுகொண்டோர் மதிய உணவு இடைவேளையின்போதுஒன்றுகூடி தமிழியல் ஆய்வுக்கென International Association for Tamil Research என்ற அமைப்பை உருவாக்கினர் .ஆதன் தலைவராகபிரெஞ்சு அறிஞர் ஜீன் பிலியோசா அவர்களும்,இணைச்செயலர்களாக அடிகளாரும், பேரா .ரொன் ஆஷரும் தெரிவு செய்யப்பட்டனன்ர்

இந்த ஆராய்ச்சி மாநாடுகள் எப்படி இருக்கும் எத்தகைய கட்டுரைகள்ஏற்புடையதாக இருக்கும் என்ற விபரங்களை அடிகளார்சென்னையிலும், மலேசியாவிலும் இலங்கையிலும்ஊடகவியலாளர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்திவிளக்கமளித்தார். கொழும்பில் வெள்ளவத்தை பிரான்சிஸ் வீதியில்இருந்த தமிழ்ப்பல்கலைக்கழக இயக்கத்துக்கு சொந்தமான நாவலர்மண்டபத்தில் நடைபெற்றது. அவர் சொன்ன விபரங்களை தேசியநாளிதழ்கள் சிறு செய்திகளாகவே வெளியிட்டன . அடிகளார் சொன்னஅனைத்தையும் நிரைப்படுத்தி விரிவாக எழுதி வார இதழ்களானசுதந்திரனுக்கும் மலையக ஏடான செய்திக்கும் கொடுத்தேன். அந்தப்பத்திரிகைகளின் ஒரு பக்கத்தை நிறைப்பதாக அது அமைந்தது. அதுஅடிகளாரைக் கவர்ந்தது. என் முயற்சியை அடிகளார் பாராட்டத்தவறவில்லை முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியஅரசின் ஆசீர்வாதத்துடன் 1964 ஏப்ரல் மாசம் கோலாலம்பூரில்சிறப்பாக நடந்து முடிந்தது.

கேள்வி: அடுத்த மாநாடுகள் எங்கே நடந்தன .அவை பற்றியும்சொல்லுங்கள்?

பதில்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடுகளைநடத்தத் திட்டமிடப்பட்டது . ஆதன்படி அடுத்த மாநாட்டை தமிழ்நாட்டில் சென்னையில் நடத்த அடிகளார் விரும்பி அப்போது முதல்அமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலத்தை சந்தித்து பேசினார். தமிழுக்கான விழாக்களை சென்னை மாநில அரசு செய்து வருவதால்இப்படி ஒரு மாநாடு தேவையில்லை என்று அன்றைய முதல்வர்பக்தவத்சலம் கைவிரித்துவிட்டார். அடிகளார் ஏமாற்றத்துடன்மலேசியா திரும்பினார். 1967 இல் சென்னை மாநிலத்துக்கான தேர்தல்நடைபெற்றது. அதில் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. அமோக வெற்றிபெறு ஆட்சி அமைத்தது அல்லாமல் சென்னைமாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையும்சூட்டிக்கொண்டனர். 1968 ஜனவரியில் தமிழ்நாடு அரசு ஆதரவில்அறிஞர் அண்ணா தலைமையில் இரண்டாவது மாநாடுவெற்றிகரமாக நடைபெற்றது. மூன்றாவது மாநாடு ஐரோப்பியஅறிஞர்கள் பெருமளவு கலந்துகொள்ள வசதியாக பிரான்சில் 1970 இல் நடைபெற்றது.

கேள்வி: நான்காவது மாநாடு1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்து, ஒருதுயர அத்தியாயமாக முடிவுற்றது. ஈழத் தமிழரால் மறக்க முடியாதமாநாடு அது! உங்கள் மனப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?

பதில்:1972 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படவேண்டும் என்பதுதீர்மானம்.அந்த மாநாடு என்னென்ன துறைகளைத் தொடவேண்டும்என்று சிந்த்தித்து அதற்கான ஒரு வரையறையை ஈழநாடு நாளிதழில்எழுதினேன். அதைபற்றிய ஒரு அறிமுகக் கூட்டத்தை அடிகளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தினார். அந்தக் கூட்டத்துக்குஎனக்குப் போக வசதிப்படவில்லை. அந்தக் கூட்டத்தில் அந்தக்கட்டுரையை அடிகளார் வெகுவாகப் பாராட்டி நான் கூட்டத்தில்இருக்கிறேனா என்றும் வினவி இருக்கிறார். 1972இல் மாநாடுநடைபெறாதபடியால் நான் அதை ஒரு கை ஏடாக வெளியிட்டேன். அதனை தமிழ் நூலகம் நிர்வாகிகள் தங்கள் சேகரிப்பில்சேர்த்துள்ளனர்.

இலங்கை மாநாடு பலத்த அரசியல் இழுபறிக்குப்பின்யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதுதான் அடிகளார் கடைசியாகக்கலந்துகொண்ட மாநாடு. அடுத்த மாநாட்டுக்கு அவர் இல்லை. மாநாடு நடந்த இறுதி நாள் பிரியாவிடை இறுதிக் கட்டத்தில்வீரசிங்கம் மண்டப வாயிலில் நின்றிருந்தேன். காவல்துறையினர்மக்கள் சட்டவிரோதமாக பாதைகளை முடக்கி சட்டவிரோதமாககூட்டம் கூடினர் என்ற அடிப்படையில் துருப்புக்காவி வண்டியில்வந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மேடையை நோக்கி சுட்டனர். குண்டுகள் என் தலைக்கு மேலாகப் பறப்பதை நான் கண்டேன். அறுந்த மின் கம்பிகள் தாக்கி மரணமும் நேர்ந்தது.

கேள்வி: அடுத்த மாநாடுகள் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள் ..?

பதில்: ஐந்தாவது மாநாடு மதுரையில் நடந்தது. அப்போது எம்.ஜி  ஆர்முதல்வராக இருந்தார். அத்தோடு  முழு ஆதரவும் தந்தார். நானும்கலந்து  கட்டுரை படித்தேன். மாநாட்டு ஒழுங்குகளை   அவர்கண்காணித்தபடி இருந்தார். உணவு வேளையில் தானும்   வந்திருந்துகுறை நிறை கேட்டறிந்தார்.

இருந்தாலும் கட்டுரைகளை தெரிவு செய்தவர்கள் இலங்கையர்களைசரியாக மதிப்பீடு செய்யவில்லை. இது இலங்கையிலிருந்து சென்றபேராளர்களை  மிகவும் நோகவைத்தது. ஆறாவது மாநாடுமலேசியாவிலும், ஏழாவது மாநாடு மொறீஷியசிலும்  எட்டாவதுமாநாடு தஞ்சையிலும் நடந்தன. அவை முழுக்க முழுக்க அரசியல்சார்ந்த மாநாடுகளாக அமைந்தன.தஞ்சை மாநாட்டில் இலங்கைப்பேராளர்கள் அவமதிக்கப்பட்டனர். அதன்பின் இந்த ஆய்வு மாநாடுகள்நடைபெறவில்லை.

கேள்வி: அப்படியானால் அடிகளாரை பின்பு நடைபெற்றமாநாடுகளில் மறந்துவிட்டார்களா?

பதில்: பேரா. சு. வித்தியானந்தன் யாழ் பல்கலை துணைவேந்தராகஇருந்தபோது மட்டக்களப்பு தமிழாராய்ச்சி மாநாட்டையும், வன்னிதமிழாராய்ச்சி   மாநா ட்டையும் நடத்தினார். அத்துடன் அடிகளாரும்ஆராய்ச்சியும்  மறக்கப்பட்டது

கேள்வி: அடிகளாரின் நினைவில் நீங்கள் சில நினைவுச்சொற்பொழிவுகளை தொடர்ந்து இலங்கையில் நடத்திவந்தீர்களே. அதுபற்றிச் சொல்லுங்கள்.

பதில்: அடிகளார் மறைந்தபின் கத்தோலிக்க திருச்சபையின்துறவிகள் சிலரையும் பொதுமக்கள் சிலரையும் கேட்டுப் பார்த்தேன். “பொறுங்கள், யாராவது செய்வார்கள் “..என்ற பதிலே வந்தது.

1989 ஆம் ஆண்டு வீரகேசரி ஆசிரியராக இருந்த திருசிவநேசச்செல்வனை அணுகினேன் . அவர் உற்சாகம் தந்து நினைவுச்சொற்பொழிவு ஏற்பாட்டிலும் பங்கெடுத்தார். அதேசமயம் பேரா. பேட்றம் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆதரவையும் நாடினேன் அவரும் ஒத்துழைத்தார். கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் பேரா. பஸ்தியாம்பிள்ளை தலைமையில் முதலாவது நினைவுச்சொற்பொழிவு இடம்பெற்றது. பேராதனை பல்கலைதொல்லியல் பேரா. சுதர்சன் செனெவிரட்னெ “தொல்லியலும் சங்கஇலக்கியமும்” என்ற பொருளில் பேசி தொல்லியல் சான்றுகள் சங்கஇலக்கியக் கூற்றுகளை உறுதிசெய்கின்றன என்று விளக்கிஎல்லோரையும் அதிசயிக்க வைத்தார்.

இரண்டாவது சொற்பொழிவை 1990 ஆம் ஆண்டு சென்னைபல்கலைக் கழக தமிழ்த்துறை ஆதரவில் தமிழ்த்துறை மண்டபத்தில்அன்றைய தமிழ்ப் பேராசிரியரும் பிற்கால துணைவேந்தருமானபேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ) தலைமையில் ஏற்பாடுசெய்தேன். அன்றைய அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின்தலைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் நினைவுரையைநிகழ்த்தினார். மதுரை பல்கலை நாட்டுப்புறவியல் பேராசிரியைவிஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், இந்திய கல்வெட்டியல் மேதைஐராவதம் மகாதேவன் ஆகியோர் பேசியது உட்பட மொத்தம் ஆறுநினைவுச் சொற்பொழிவுகளை ஏற்பாடுசெய்தேன். 1995இல்முடமானதோடு என்னால் தொடரமுடியவில்லை.

பின்பு ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சு. சர்வானந்தா தலைமையில்அடிகளார் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்க நடவடிக்கைஎடுத்தோம்.நான் முடமானேன்.நீதியரசர் மறைந்துவிட்டார். பின்புஒஸ்திரேலியாவில் இருந்த வி .எஸ்.துரைராஜா அவர்களுடன்இதை முன்னெடுக்க முயற்சி செய்தேன். அவரும் போய்விட்டார்.

கேள்வி: உங்கள் விருப்பம் என்ன?

பதில்:

  1. சென்னைதரமணியில் உள்ள அனைத்துலகத் தமிழாராய்ச்சிநிறுவனம்
    அடிகளாரும் அறிஞர் அண்ணாவும் விரும்பியவண்ணம்அமையவில்லை.பிறநாட்டவர்கள் வந்து தங்கி தமிழைப் பயிலவும், ஆய்வு செய்யவும், ஏற்ற வசதிகள் கொண்ட நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்.அடிகளாரைப்பற்றிய நல்ல கட்டுரைகள் கொண்ட ஒரு நினைவுமலர்
    ஒரு இடத்தில் அச்சேற்றப் பணம் கொடுக்காததால் தூசி பிடித்துஅழிந்துகொண்டிருக்கிறது. அதை அச்சேற்றி வெளியிட ஆவனசெய்யவேண்டும்.அடிகளாரின் கலாநிதிப்பட்ட ஆய்வு லண்டன் பல்கலையில்உள்ளது. அதில் இதுவரை எவரும் எடுத்துக்காட்டாத பல புதியதரவுகள் உண்டு என்று சென்னை பல்கலை நினைவுரையின்போதுபேரா. பொற்கோ சொன்னார்.
    அதில் ஒன்று அசோக மாமன்னன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்என்பது.

    அடிகளாரின் நூற்றாண்டிலாவது கண்விழித்துக் கொண்டவர்கள்இவற்றை வெளியிட ஆவன செய்ய வேண்டும்.

    அடிகளாருக்குஆழமான அரசியல் பூச்சுக் கொடுக்கப்பட்டுவருகிறது.
    அவர் மொழி உரிமைக்கு குரல் கொடுத்தார். அரசியலுக்குள்ஆழமாகச் செல்லவில்லை.

    1000ஆண்டுகளுக்குமுன் தமிழ் பல நாடுகளில்வ்ழக்கிலிருந்ததாக அடிகளார் சொன்னதாகவும் அதைக்கண்டுபிடித்து மீளவும் வழக்குக்குக் கொண்டுவரவேண்டும் என்றும்சில வட்டாரங்களில் பேசப்படுகிறது.

  2. தொல்காப்பியர், நன்னூலார் கூட செந்தமிழ், திசைத்தமிழ்வழங்கிய இந்தியா இலங்கை உட்பட்ட இடங்களைத்தான்குறிபிட்டார்கள்.மிகைப் பேச்சுகளால் பயனில்லை. தெளிவுபடுத்துவார்களா?அடிகளார்அறுபதுகளில் டயிம்ஸ் பத்திரிகையில் இரண்டு தொடகட்டுரைகள் தமிழை தற்காலத் தேவைக்கு ஏற்பவளப்படுத்துவது பற்றி எழுதினார். அவர் ஊடகத்துறையில் தமிழ்எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதை விளக்கியிருந்தார். தமிழில்உள்ள ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய தான்ஆங்கிலச் செய்தியை பார்க்கவேண்டி இருப்பதை சுட்டிக் காட்டினார். அந்த உறுதிப்பாடு கூர்மை தமிழ் ஊடகவியலாளரரிடம்அன்று இருக்கவில்லை. அதாவது தமிழ்மொழியை கையாளும்திறமை கைவரப்பெறவில்லை.இன்று இணையதளங்களில்பாவிக்கப்படும் மொழிகளில் தமிழ் இரண்டாம் இடத்தைப் பெறுகிறதுஎன்று சொல்கிறார்கள்.
  3. ஆனால் இணையத் தளங்களில் உள்ள எழுத்துருக்களைப் அப்படிஎழுதுபவர்கள் இன்னும் இருக்கிறார்களே என்றுபரிதாபப்படவேண்டி இருக்கிறது. ஊடகத்துறையில் தமிழைஇன்னும் வளப்படுத்த ஆவன செய்வோமாக.. என்று அவரைநினைத்து இவை பற்றிய ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்!இன்றைய காலகட்டத்தில் தேவையான பல நினைவுகளையும்கருத்துக்களையும் தந்தமைக்கு நன்றி. தனிநாயகம் அடிகளாரின்நினைவு பற்றிய சிந்தனை அலைகள் பாய்ந்து செல்லும் இந்தஆண்டில் தமிழ் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மறைந்திருந்தஇத்தனை தரவுகளையும் குளோபல் தமிழ்ச் செய்தி ஊடாகத்தந்தமைக்கு மிக்க நன்றி தேவராஜன் அவர்களே!

 குறிப்பு –

இந்த செவ்வியை மீள் பிரசுரம் – வெளியீடு செய்பவர்கள்  குளோபல் தமிழ் செய்திகளுக்காக  எஸ் எம்வரதராஜன்  பெற்றுக்கொண்ட செவ்வி என்ற மூலத்தை குறிப்பிடவேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More