Home இலங்கைதுணுக்காய் அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

துணுக்காய் அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற  பேருந்து சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் தாம்  நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பேருந்து சேவைகள் நடைபெற்று வந்தன.

எனினும்   அக்கராயனில் துணுக்காய் பேருந்து தரிக்கக் கூடாது என கிளிநொச்சி தனியார்  பேருந்து  சங்கத்தினர் அறிவித்தமையினால்  குறித்த பேருந்து சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக இடம் பெறவில்லை.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மேற்படி கிராமங்களின் பொது அமைப்புகள் மனுக்கள் கையளித்த போதிலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் மேற்படி கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து இடம் பெறவேயில்லை.

வடமாகாண பிரதி அவைத் தலைவர் கூட வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் பயனில்லை என தெரிவித்த  பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள்  துணுக்காயில் இருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவைகளை நடாத்துவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என   வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More