குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து இடம்பெற்று தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்த இந்த போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது
மியன்மார் நாட்டில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும் அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையையும் கண்டிக்கும் பதாதைகளை தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
சர்வதேசம் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலையை மேற்கொள்பவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன் க.விந்தன் மற்றும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.