Home இலங்கைஅமெரிக்க பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் பாதுகாப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் பாதுகாப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவின் அமெரிக்க இராணுவப் பசிபிக் கட்டளை (USAPC) தலைமையகத்தின் வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல்  இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள  மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல்   நேற்று முன்தினம் (31)  வியாழக் கிழமை இராணுவ தலைமையகத்தில்  ராணுவத்தளபதியை சந்தித்துள்ளார்.

தளபதிகள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. பின்பு பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்.  அத்துடன்   பத்தரமுல்லையில் அமைந்துள்ள படை வீரர்களது நினைவு தூபி தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More