180
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love