எவர் எதனை கூறினாலும் கூட்டரசாங்கத்தின் கடந்த இரண்டரை ஆண்டுகால பயணம் வெற்றிகரமானதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டில் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முதன்மை கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய கூட்டரசாங்கத்தின் சௌபாக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கை ‘வி-2025’ வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (04) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்துக்காகவே கூட்டரசாங்கத்தை உருவாக்கி இதற்கு முன்னர் எவரும் கண்டிராத புதிய அரசியல் அனுபவத்தை நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கூட்டரசாங்கத்தின் பயணத்துக்கு எந்தளவு விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்த போதிலும், அந்த பயணம் சவால்மிக்கதாக இருந்தபோதிலும் அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கட்டாயமாக நிறைவேற்றவேண்டிய பணியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அறுபது ஆண்டுகளுக்கு கூடுதலான காலம் எதிராக இருந்த நாட்டின் முதன்மையான கட்சிகள் இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டரசாங்கத்தின் பெறுபேறுகள் மிக குறுகிய காலத்தினுள் நூறு வீதம் வெற்றிபெறாவிட்டாலும் ஒழுக்கத்துடனும், மனமுதிர்வுடனும் செயற்பட்டு, அந்த சவால்மிக்க பொறுப்பை நிறைவேற்றுவதற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் அனைவராலும் முடிந்துள்தாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்திலும் கூட்டரசாங்கத்தின் பயணம் சிறந்த புரிந்துணர்வுடன் பலமாக முன்னோக்கி பயணித்து, நாட்டுக்கும், மக்களுக்குமான பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றப்படுமெனவும் ஜனாதிபதி ; தெரிவித்தார்.