Home இலங்கைநேபாளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை உதவி

நேபாளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை உதவி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேபாளத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கி உள்ளது. நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் ஸ்வர்னா பெரேரா, 50000 அமெரிக்க டொலர்களை இலங்கையின் சார்பில் நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.

அண்மையில் நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன்  1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  40000 வீடுகள் வரையில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More