குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று(04) கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறாமீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் ஈடுபடும் எவருக்கும் ‘எலோபிடே’ வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறா உடல் அல்லது உடலின் பகுதியை படகில் வைத்திருப்பது , மற்றுமொரு படகுகளுக்கு பரிமாற்றுவது, இறக்குதல், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.