குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று (06.09.2013)முதல் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகம் புதிய முகவரியில் இயங்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இது நாள்வரையும் ஆடியபாதம் வீதி,கல்வியங்காடு,யாழ்ப்பாணம். என்னும் முகவரியில் இயங்கிவந்த கல்வி அமைச்சரின் அலுவலகம் இன்று முதல் செம்மணி வீதி,நல்லூர்,யாழ்ப்பாணம். என்னும் முகவரியில் செயற்படும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனை சந்திக்க விரும்பும் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் வாராந்தம் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் அலுவலக நேரத்தில் சந்திக்க முடியுமெனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.