Home இலங்கைகட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது

கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது

by admin

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி   நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

இன்று (07)   பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.  கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும்  பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி   எவராவது மனக்குறைகளை முன்வைக்கும் போது அரசாங்கம் பூரண பங்களிப்பை வழங்கி அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அரச கொள்கைக்கமைய பிரதேச ரீதியில் அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூரணப்படுத்தி நகர பாடசாலைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் பிரபல பாடசாலைகளுக்கான போட்டியை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ,  கல்வித்துறையில் நிலவும் வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும்   சிறந்த   கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More