158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் சில தினங்களுக்கு இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில்; தற்போது மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருகின்றது, இந்த நிலைமை எதிர்வரும் 12ம் திகதி வரையில் தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை பெய்யும் போது கடுமையான காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் எனவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love