குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கைக்காக நிலப்பண்படுத்தல்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், ஆகிய குளங்களின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
பிரமந்தனாறு, கனகாம்பிகைக்குளம் என்பன மேட்டுப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படும். ஏனைய குளங்களின் நெற்செய்கை மேற்கொள்ளப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம் என்பவற்றினால் மாவட்டத்தில் விவசாய முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் இவ்வாண்டு காலபோகத்திற்குரிய நிலப்பண்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.