இந்தியா பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்துச் செய்யப்பட்டது:-

பொதுக் குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் உட்பட 14 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா, தினகரன்  அ.தி.மு.கவில் இருந்து நீக்கம்?  பொதுக் குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள்?

அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதிமுக பொதுக்குழு இன்று காலை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்குவது; ஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மேலும் காவிரி நதிநீர் விகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை, நீட்டை பற்றி குறிப்பிடாமல் கல்வி முறை தொடர்பாக ஒரு தீர்மானம் என 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link