மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இது தொடர்பில், மக்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குகுலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, புலத்சிங்கள, அஹலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதீப் கொடுப்பிலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment