156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பிரதான கிரிக்கட் மைதானத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love