குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்யாவிற்கு தடை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 நாடுகளைச் சேர்ந்த, ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர் ஊக்க மருந்து பயன்பாடு இல்லா ஓர் நேர்மையான போட்டியாக அமையுமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஸ்யா ஊக்குவித்து வருவதாகவும், போட்டிகளில் வீர வீராங்கனைகள் நேர்மையாக வெற்றியீட்டுவதனை ஊக்கப்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.