குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா இன்று ஜப்பானிற்கு மேல் ஏவுகணையை செலுத்தியுள்ளமை ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் என அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இன்றைய நடவடிக்கையும் அமெரிக்கா உட்பட உலக நாடுகளை கடுமையாக எச்சரிக்கும் விதத்தில் அந்த நாடு கருத்துக்களை வெளியிட்டு வருவதும் தடைகள் காரணமாக வடகொரிய நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளதை புலப்படுத்தியுள்ளன என பிரதமர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிற்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பது ஜப்பானிற்கு ஆபத்தானதாக மாறுமா என கேள்விக்கு நான் அவ்வாறு கருதவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது தடைகளை விதித்து அந்த நாடு உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்துவதே அவசியமான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் எவரும் போரைவிரும்பவில்லை என தெரிவித்துள்ள அவுஸதிரேலிய பிரதமர் வடகொரிய ஜனாதிபதி போர் ஓன்றை ஆரம்பிக்க விரும்பினால் அது அவர் தனது தற்கொலை கடுதாசியை எழுதுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளார்