குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்களின் பின்னர் சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமது கட்சி 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாணசபைகளினதும் தேர்தல்களை ஒரே நாளில் நடாத்துவது உள்ளிட்ட யோசனைகள் 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளன.