இந்தியா பிரதான செய்திகள்

ரஜினி விரும்பினால் அவரை இணைத்துக் கொள்ளத் தயார்! கமல்ஹாசன்:-

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய அரசியல் வருகையை ஒரு புரட்சிகர நாளில் அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை மக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலுக்கு வந்த பின்னர் ரஜினியுடன் பேசத் தயார் என்றும், அவர் விரும்பினால் அணியில் அவரை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

கேரள முதல்வரை சந்தித்தது போல், தமிழக முதல்வரை சந்திக்க ஆசைப்படுவதாகவும் ஆனால், அதற்குள் மாறிவிடுவாரோ என்ற பயம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக அரசியலிற்கு வரவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.