225
முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மற்றும் பிரம்படி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறி ஏழு மாதங்களைக் கடந்தபோதும், இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் அந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் தாங்களாக அமைத்துக்கொண்ட தற்காலிக கொட்டகைகளிலேயே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இந்தப் பகுதி மக்கள் விமானப்படையினரிடம் இருந்து தமது நிலங்களை மீட்டு மீளக்குடியமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love