குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் தாம் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஆளும் கட்சியில் நீடிப்பதில் பயனில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என பிரதி அமைச்சர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டால் அது கட்சிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.