குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென சங்க சபை கோரியுள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரியுள்ளது.
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சங்கசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கத்தோலிக்கரான ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபையும் எதிர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.