குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரேஸில் நாட்டின் டென்னிஸ் வீரர் கில்ஹெர்மி கிளீஸர் ( Guilherme Clezar) க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் பேரவையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகாவில் ஜப்பானிய வீரர் யூகி சுஜிதா (Yuichi Sugita )விற்கு எதிரான டேவிஸ் கிண்ணப் போட்டியின் போது அநாகரீகமாக சைகை செய்தார் என கில்ஹெர்மி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நடுவர்களின் தீர்ப்பினை இழிவுபடுத்தும் வகையில் சைகை செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. கோபமாகவோ, இனவாத அடிப்படையிலோ சைகை செய்யவில்லை என கில்ஹெர்மி தெரிவித்துள்ளார். எனினும் விளையாட்டு வீரர்களுக்கு உண்டான கொள்கைகளை மீறிச் செயற்பட்டமைக்காக 1100 ஸ்ரெலிங் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச டென்னிஸ் பேரவை தெரிவித்துள்ளது.