குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் 52 வீதமான சனத்தொகையினருக்கு இணைய வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. குளோபல் ப்ரோட்பான்ட் முன்னேற்ற அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேகமான இணைய வசதிகள் ஏனைய சமூக இலக்குகளை எட்டுவதற்கான ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக அளவில் இணையத்தின் சராசரி வேகம் 7.2 மெகா பைட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் உலக நாடுகளுக்கு இடையில் இணைய வசதி மற்றும் இணையத்தின் வேகம் என்பன தொடர்பில் பாரிய இடைவெளி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இணையத்தின் வேகம் பாரியளவில் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.