குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய குர்திஸ்களின் சர்வஜன வாக்கெடுப்பு இடைநிறுத்தப்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல்-அபடி ( Haider al-Abadi ) கோரியுள்ளார். ஈராக்கிலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் குர்திஸ்கன் இந்த சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையிலேனும் இந்த வாக்கெடுப்பு இடைநிறுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் கோரியுள்ளது. ஈரான், துருக்கி, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எவ்வாறெனினும் திட்டமிட்ட அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஈராக்கிய குர்திஸ் தலைவர் மசூத் பர்ஜானி ( Massoud Barzani ) தெரிவித்துள்ளார்.