குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரைச் சேர்ந்த பௌத்த பிக்குகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு மியன்மார் பௌத்த பிக்குகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மியன்மாரைச் சேர்ந்த ஏழு பௌத்த பிக்குகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்ததாகவும் அவர்களுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரோஹினிய முஸ்லிம்கள் சுற்றுலா வீசாக்களில் நாட்டுக்குள் பிரவேசித்து புகலிடம் பெற்றுக் கொள்வதனை தடுக்கும் நோக்கில், மியன்மார் பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மியன்மார் ராஜதந்திரிகளுக்கு மட்டும் தீவிர சோதனைகளின் பின்னர் வீசா வழங்கப்பட உள்ளது.